2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஒன்று கூடல்

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்ட பெண்களின் ஒன்று கூடல், இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

“மக்கள் மன்றம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் அனுபவங்கள் பகிரப்பட்டன. அத்துடன், நுண்கடன், போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கெதிரான வன்முறைகள், பெண்களுக்கான அரசியல் பிரவேசம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.

அதன்பின்னர் அனந்தி சசிதரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்க்கதாகும்.

நிகழ்வில் உரையாற்றிய அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில்,

பெண்கள் இன்று பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்த வருகின்றனர். அதிகமான பெண்கள் நுண்டன் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த திட்டத்தை மத்திய அரசாங்கமும், மத்திய வங்கியுமே நிறுத்த முடியும். இவ்வாறான நுண்கடன் திட்டங்களுக்கு பதிலாக கிராம மட்டங்களில் பல்வேறு இலகு கடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் கிராம மட்ட அமைப்புகள் அவற்றை தமது உறவினர்களுக்கு முன்னுரிமையாக வழங்குவதால், உண்மையான தேவை உடையோர் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X