2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரச்சினைகளைச் சொல்ல சந்தர்ப்பம் இல்லை

Niroshini   / 2017 ஜனவரி 22 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தங்களுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம், அக்கராயன் பிரதேச பொது அமைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அக்கராயன் பிரதேசத்தின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அக்கராயன் மத்தி பொது மண்டபத்தில் பொது அமைப்புகள் சனிக்கிழமை ஒன்றுகூடி கலந்துரைாயாடியப்போது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அதிகாரிகளின் பங்கேற்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெறுவது வழமை.

பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்காமலும் தகவல் தெரிவிக்காமல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்துவதனால் எந்தவிதமான பயன்களும் மக்களுக்குக் கிடைக்கப் போவதில்லை.

மாவட்டத்திலே இரண்டாவது பெரிய குளத்தைக் கொண்டதும் உபநகரமாக விளங்குகின்ற அக்கராயன் பிரதேசத்தின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கு இக்கூட்டங்களில்  சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதில்லை.

இதனால் தான், அங்குள்ள பல்வேறு பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. மாவட்டச் செயலகத்தில் நடைபெறுகின்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுவதில்லை.  இது தொடர்பில் நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும் கவனம் செலுத்துவதில்லை” என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .