2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஒரு வாகனத்திற்கு 2,000 ரூபாய்க்கு மட்டுமே டீசல்

Freelancer   / 2022 மார்ச் 03 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட் 

மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கையிருப்பானது மிகவும் குறைவான நிலையில் காணப்படுவதால் இன்று காலை முதல் வாகனம் ஒன்றுக்கு இரண்டாயிரம்  ரூபாய்  வரை மட்டுமே   டீசல் வழங்கப்பட்டுவருகிறது .

அதே நேரம் ஏனைய தேவைகளுக்கு கேண்கள் மற்றும் போத்தல்களுடன் வரும் உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

டீசல் இன்மையால் தூர இடங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் ,சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் பல இடங்களில் டீசல் பதுக்கல் இடம் பெறுவதுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களை விட அதிக விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X