Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி குடிநீர்த் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் குடிநீர்க் கிணறுகள், உவர் நீராக மாறி இருப்பதன் காரணமாக குடிநீருக்கு நீண்ட தூரம் நடக்க வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கும் மக்கள், தமது கிராமங்களுக்கு எதிரேயுள்ள சாலை ஆற்றின் குறுக்கே அணை அமைத்து, தமது கிராமங்களையும் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய கிராமங்களையும் உவர் ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உவர் அடைந்த நிலப்பரப்புகளினால் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடிக்கு குடிநீர்த் திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறும் தற்போது 450 வரையான குடும்பங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago