Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 ஜனவரி 16 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு துணுக்காய் ஆரோக்கியபுரம் பகுதியில், குடிநீர் விநியோகத்துக்கான நீர்த்தாங்கி மற்றும் ஏனைய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டும், குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது செயலிழந்த நிலையில் காணப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றாகக் காணப்படும், ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்து வரும், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தமக்கான குடிநீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப்பகுதியில் நிலவுகின்ற குடிநீர்த் தேவை தொடர்பில், இப்பகுதி மக்கள், கடந்த 2010ஆம் ஆண்டு விடுத்த கோரிக்கையையடுத்து, 2013ஆம் ஆண்டு, துணுக்காய் பிரதேச சபையினால், குடிநீர் விநியோகத்துக்கான நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோக குழாய்களும் பொருத்தப்பட்டு, இதன் பணிகள், 2014ஆம் ஆண்டில், குடிநீர் விநியோகம் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. எனினும், இன்று வரை குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படாது, கைவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, குடிநீர் தேவையுள்ள இப்பகுதியில், அதிகளவில் நிதிகளை செலவிட்டு அமைக்கப்பட்ட இக்குடிநீர் விநியோகத்திட்டம் செயலிழந்து காணப்படுகின்றது என்றும் இதனால், இங்குள்ள குடும்;பங்கள் தமக்கான குடிநீர் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக, முல்லைத்தீவு உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, 'குறித்த கிராமத்துக்கு, நீர் விநியோகம் தொடர்பான கட்டுமானப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மக்களுக்கு குடிநீர் விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago