Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பகபுரம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள், புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
கற்பகபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அதனை வழங்கி வைத்தார்.
கற்பகபுரம் கிராமத்தில் குடியிருந்த மக்கள், யுத்தம் காரணமாக இந்திய மற்றும் அயல் பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்திருந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மீள்குடியேறியிருந்தனர்.
அவர்களது காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாத நிலையிலேயே அவர்கள் தமது காணிகளில் குடியேறியிருந்ததுடன், காணியற்ற மக்களுக்கும் அப்பகுதியில் காணிகள் வழங்கப்பட்டிருந்தன.
தமக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக கோரி வந்த நிலையில் இந்த காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago