Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கேப்பாபிலவு விமானப்படையின் முகாமுக்கு முன்னால், 'இது விமானப்படையினரின் காணியாகும். தேவையில்லாமல் உட்செல்லல் தடை. தேவையில்லாமல் சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவீர்கள்' என்ற எழுத்துப் பிழையுடனான அறிவித்தல் வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள்.
இந்த மக்களின் போராட்டத்துக்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மக்களும் தங்களுடைய காணிகள் மீண்டும் தங்களுக்குக் கிடைக்காதுவிடின் விமானப்படையினரின் தடையையும் தாண்டி தங்களின் காணிகளுக்குச் செல்ல வேண்டிவருமெனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மக்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில், நேற்று (17) விமானப்படையினர் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.
இது அனைத்து தரப்பினர்களிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago