2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

காணிகளை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் காணிகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீளப் பெற்றுக்கொள்வதற்கு மாவட்டச் செயலாளரூடாக கோரவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான சி.சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (02) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டத்துக்கு அத்தியாவசியமானது. இவ்வாண்டில் நாங்கள் இரண்டாவது கூட்டத்தில் கூடியுள்ளோம். இக்கூட்டத்தில் பல நிர்வாகப் பிரச்சனைகளை தீர்க்க வேண்டியுள்ளோம்.

அரச காணிகள், நிறுவனங்களுடைய காணிகள் உட்பட பலவிடங்களில் இராணுவத்தினரால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. நிறுவனங்கள், திணைக்களங்கள் பறிகொடுத்த காணிகளை மீள எழுத்துமூலம் கோரவில்லையென்றே நினைக்கின்றேன்.

பொது நிறுவனங்கள், அரச நிறுவனங்களுக்கான காணிகளை அனைத்து அரச திணைக்கள தலைவர்களும் மாவட்டச் செயலர் மூலம் எழுத்துமூலம் கோரவேண்டுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .