2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணிகளை விடுவிக்க கோரி நாளை கண்டனப்பேரணி

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி கண்டனப்பேரணி, நாளை  (27) நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி விவசாயப்பண்ணைக்காணி, கிளிநொச்சி மகாவித்தியாலக் காணி, மாவட்டச் செயலக காணி, தேசிய இளைஞர்சேவை நிலையக் காணி, நீர்ப்பாசனத் திணைக்களக்காணி, உள்ளிட்ட காணிகள் கடந்த எட்டு வருடங்களாக படையினர் வசமுள்ளன. இதனால், குறித்த அரச திணைக்களங்களின் செயற்பாடுகளில் இடர்பாடுகள் காணப்படுகின்றன.

எனவே, அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்டனப்பேரணி காலை 9 மணிக்கு வட்டக்கச்சி விவசாயப்பண்ணை முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை சென்றடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .