2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

காணி துப்புரவு பணியை பார்வையிடார் மஸ்தான் எம்.பி

Niroshini   / 2017 ஜனவரி 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்து வவுனியா,இறம்பைக்குளம் மகளிர் கல்லூரிக்கு கையளிக்கப்பட்ட விளையாட்டு மைதான காணியில் மேற்கொள்ளப்படும் துப்புரவு நடவடிக்கைகையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் பார்வையிட்டார்.
அதன் பின்னர், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுவினருடனும் அவர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
யுத்தகாலத்தில் வவுனியா விமானப்படை தளத்துக்காக சுவீகரிக்கப்பட்ட தனியாரின் காணியில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் விளையாட்டு நிகழ்வுகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தன.
இந்நிலையில், யுத்த நிறைவின் பின்னர் இக் காணியை பாடசாலைக்கு விடுவிப்பு செய்து தருமாறு பாடசாலை நிர்வாகத்தால் மஸ்தான் எம்.பியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனையடுத்து, முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளைத் தொடர்ந்து, மைதானம் அமைந்திருந்த காணியை  பாடசாலையிடம் விமானப்படையினர்  கையளித்தனர்.
அதன்பின்னர், மைதானத்தைச் சுற்றி பாடசாலையினால் வேலி போடப்பட்டு துப்புரவு செய்யப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .