2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆதங்கம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

45 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்னால், இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொடர்  கவனயீர்ப்பு போராட்டம், இரவு பகலாக தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தாங்கள் பல்​வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் போராட்டத்தினை முன்னெடுத்து செல்கின்றோம். எமது போராட்டத்திற்கு ​எந்ததொரு தீர்க்கமான பதிலையும் வழங்காமல் தங்களை அனைவரும்  கைவிட்டு விட்டதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதலால் மாவட்டத்திலுள்ள, அரச நிர்வாக கட்டமைப்பை முடக்கி காணாமல் ஆக்கப்பட்ட தங்களின்  உறவுகளுக்கு நீதிக் கோரி போராட தீர்மானித்து இருப்பதாகவும், இதனால் தங்களின் போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி,போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .