2025 ஜூலை 12, சனிக்கிழமை

காணாமல் போன சிறுமி மீட்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, நாச்சிக்குடா பகுதியில் காணாமல் போன 11 வயதுடைய சிறுமி ஒருவர் இன்று சனிக்கிழமை (31) காலை மீட்கப்பட்டுள்ளதாக, நாச்சிகுடாப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி, வெள்ளிக்கிழமை (30) மதியம் முதல் காணாமல் போன நிலையில் நாச்சிகுடா பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின் போது இன்று நொச்சிமுனை குளப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (30) வீட்டு வாசலில் இருந்த குறித்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார்.

உறவினர்கள் எங்கு தேடியும் சிறுமியை காணாத நிலையில் நாச்சிகுடாப் பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின் போது இவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகிறது.

தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்காக சிறுமி முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .