2025 ஜூலை 12, சனிக்கிழமை

காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதம்

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

காணாமல் போனோரின் உறவினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில்  ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்று வரும் இப்போராட்டம்,  வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளுடன் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

காணாமல் போனோரின் உறவினர்கள், கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டதன் பின்னர், ஊர்வலமாக வவுனியா பிரதான தபாலகத்துக்கு முன்பாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .