Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 மார்ச் 02 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தினை இரண்டாகப் பிரித்து, இன்னொரு கிராம அலுவலர் பிரிவினை உருவாக்குமாறு, பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
“1,200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற இக்கிராமத்தில், இன்னுமொரு தனியான கிராம அலுவலர் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்” என, நீண்டகாலமாக இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
யூனியன்குளம், கோணாவில் மத்தி, கிழக்கு என பெரியதொரு கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைந்து காணப்படுகின்றன.
கிராமத்தின் உள்வீதிகள் புனரமைக்கப்படாமை, கிராமத்தின் மத்தியப் பகுதிக்கு பஸ்கள் பயணிக்காமை எனப் பல்வேறு குறைபாடுகள் இக்கிராமத்தில் காணப்படும் நிலையில், தனியான கிராம அலுவலர் பிரிவு உருவாக்கப்படுவதன் மூலம், நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என இந்த மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இக்கிராமத்தில் உள்ள அதிகளவான மக்கள், நீண்ட தூரம் நடந்தே, கிராம அலுவலகத்துக்குச் சென்று வருகின்றனர். இதன் காரணமாக, யூனியன்குளத்தினை முதன்மைப்படுத்தி கிராம அலுவலர் பிரிவொன்றை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025