Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு, பிலவுகுடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படுவது தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உரிய பதில் தரவில்லை என்றும் இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றினை நடத்ததுவதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு முனைந்து வருவதாக, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் செவ்வாய்க்கிழமை (14) இரவு சந்தித்த சிறிதரன் எம்.பி, போராட்டக்கார்கள் முன்னிலையில், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தனுடன் அலைபேசியூடாக தொடர்புகொண்டு, போராட்டக்காரர்களின் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
'முல்லைத்தீவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்;பட்டுவரும் நில மீட்புப் போராட்டம் தொடர்பாக, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இரு முறை நான் பேசியுள்ளேன். இருப்பினும், அப்பேச்சுவார்த்தைகளின் எந்தப் பயனும் இல்லை. சாதகமான பதிலை பிரதமர் தரவில்லை. இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இவ்விடயம் தொடர்பாக அவசரமாக கலந்துரையாடவுள்ளோம்' என, சம்பந்தன் தெரிவித்ததாக, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம், சிறிதரன் எம்.பி தெரிவித்தார்.
மக்கள் போராட்டம் வெற்றிபெற வேண்டும். மக்களது நியாயமான போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான முழுமையான ஒத்துழைப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கும். முல்லைத்தீவில் நில மீட்புக்காக நடைபெற்று வரும் இரு போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கான தீர்வினை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும் என்றும், அவர் இதன்போது உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago