Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Gavitha / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் நடைபெற்றுவரும் நில மீட்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கை உட்பட, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து போராட்டம் நடைபெறும் இடத்துக்கு பெரும் தொகையானவர்கள் படையெடுத்து வருவதால், நில மீட்புப் போராட்டங்கள் மேலும் வலுவடைந்து வருகின்றன.
கேப்பாப்பிலவில் விமானப்படையினால் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கடந்த மாதம் 31ஆம் திகதியில் இருந்து பிலக் குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதேபோன்று புதுக்குடியிருப்பில் இராணுவத்தினால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எந்தவிதமான தீர்வுகளும் இவர்களுக்கு வழங்கப்படாமலுள்ள நிலையிலும், அவர்கள் தமது முடிவுகளில் இருந்து தளர்ந்து கொள்ளாமல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவ்வாறு தொடர்ந்துவரும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில், பலர் அங்கு வருகைதந்து மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதை காணக்கூயதாக உள்ளது.
நேற்று, கிழக்கு மாகணத்தின் பல்கலைக்கழக மாணவர்கள், பிரஜைகள் குழுவினர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் என பலரும் அங்கு வருகைதந்திருந்தனர்.
மேலும் சிவன் அறக்கட்டளை நிதியத்தின் நிறுவுனர், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் உப தலைவர் சதீஸ் ஆகியோரும் அங்கு வருகைதந்து போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago