2025 ஜூலை 12, சனிக்கிழமை

கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்

George   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க கோரி, அக்கிராம மக்களினால், மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா பாடசாலைகளில் மாணவர்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இன்று காலை, பாடசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள், “மக்களின் காணிகளை மக்களிடம் கொடு, அரசாங்கமே எங்களின் நிலத்தை எங்களுக்கு விட்டு விடு, அரசே நில ஆக்கிரமிப்பின் மூலம் மாணவாகளின் கல்வியை பாழாக்காதே, காணிக்காக போராடும் மக்ளுக்கு தீர்வை வழங்கு, எதிர்க்கட்சித்தலைவர் 2016 ஏமாற்றப்பட்ட தலைவரா, ஏமாந்த தலைவரா” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டங்கள் அனைத்து பாடசாலைகளிலும் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .