2025 ஜூலை 12, சனிக்கிழமை

கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 25 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது நிலங்களை மீள தம்மிடம் ஒப்படைக்க வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதன்கிழமை (25) முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், தெரிவிக்கப்பட்டவாறு ஜனாதிபதி வருகை தரவில்லை.

கேப்பாபுலவு பகுதியில் குடியிருந்த மக்களை யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றத்தின் போது சூரியபுரம் பகுதியில் கேப்பாபுலவு எனும் மாதிரி கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேற்றினர். அக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் எவையும் இல்லை. இந்நிலையில் தமது சொந்த கிராமத்தில் தம்மை மீள் குடியேற்றுமாறும் தம்முடைய கிராமத்தை விடுவிக்குமாறும் கோரி, மக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அவர்களுடைய சொந்த நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டச்செயலரிடம் ஜனாதிபதிக்கான மகஜரையும் இன்று (25) காலை கையளித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .