2025 ஜூலை 12, சனிக்கிழமை

கேரள கஞ்சாப்பொதிகளுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் வைத்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை வைத்திருந்த இருவரை, மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார், இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து தென் பகுதிக்குக் கொண்டு செல்லும் வகையில் ஹயஸ் ரக வாகனத்தில் பதுக்கிக்கொண்டு செல்லப்பட்ட சுமார் 110 கிலோகிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், தலைமன்னாரில் இருந்துமன்னார் நோக்கி வந்த ஹயஸ் ரக வாகனத்தை 2ஆம் கட்டை பகுதியில் வைத்து இன்று அதிகாலை இடை மறித்து சோதனை செய்தனர்.

இதன்போது சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 110 கிலோ கிராம் எடை கொண்ட கேரளக் கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அநுராதபுரம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .