2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கால்நடைகளை மீட்டுத்தர வேண்டும்

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடைகளை மீட்டுத்தருமாறு, அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு மற்றும் முள்ளிவாய்க்கால்  ஆகிய பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள், அவர்களது பூர்வீக வாழ்விடங்கள் என்பவற்றை தொடர்ந்து படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை விடுவித்து தங்களது வாழ்விடங்;களுக்குச் சென்று வாழ்வதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு தொடர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டு  வருகின்றனர்.

இந்நிலையில், கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் தங்கியுள்ள தங்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்கான உதவிகள் எவையும் இல்லை என்றும் தங்களுடைய நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இதனை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த ஆண்டில் ஒரு பகுதி கால்நடைகளைப் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டபோதும் அதன் அனுமதி உடனடியாகவே நிறுத்தப்பட்டது என்றும் தற்போது படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது கால்நடைகள் ஏதோ ஒரு விதத்தில் களவாடப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்த அதன் உரிமையாளர்கள், இவ்வாறு காணப்படும் கால்நடைகளை பெற்றுத்தருமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் பகுதியிலும் பொது மக்களுக்குச் சொந்தமான  தங்களுடைய நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இதனை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .