2025 ஜூலை 12, சனிக்கிழமை

காலையில் வாய்த்தர்க்கம்: மாலையில் வாள் வெட்டு 8பேர் வைத்தியசாலையில் அனுமதி

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கோப்பாய் இராசவீதியில் உள்ள கள்ளுத்தவறணையில், ஞாயிற்றுக்கிழமை (19) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச்சம்பவத்தில், வாள்வெட்டுக்கு இலக்காகிய 3 பேர் உள்ளிட்ட 8 பேர், படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளுத்தவறணையில் வைத்து சிலருக்கிடையில், ஞாயிற்றுக்கிழமை காலையில், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாலை நேரத்தில் 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர், கள்ளுத்தவறணைக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், அப்பகுதியில் இருந்த கடைகள், அவ்விடத்தில் தரித்து நின்ற வாகனங்கள் மற்றும் அப்பகுதியில் சென்ற வாகனங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து 3 கிலோமீற்றர் தூரத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கள்ளுத்தவறணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 1 மணித்தியாலமாக அவ்விடத்தில் இருந்து அட்டகாசம் புரிந்த நபர்கள், அங்கிருந்துச் சென்றப் பின்னரே, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .