2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குரங்குகளினால் தொல்லை

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில், குரங்குகளின் தொல்லைகளினால், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரத்திலே குரங்குகளின் தொல்லை, 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரித்துக் காணப்படுகின்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிளிநொச்சி மகா வித்தியாலயம் எதிர்கொள்ளும் குரங்குகளின் தொல்லை தொடர்பாகத் தெரியப்படுத்தப்பட்டு, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், குரங்குகளைக் கட்டுப்படுத்துவதற்கு, வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை. பாடசாலை நேரத்தில் பெருமளவு குரங்குகள், வகுப்பறைக்குள்ளும் வகுப்பறைச் சூழல்களிலும் நடமாடுவதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதுடன், மாணவர்களின் உணவுகளை எடுத்து உண்பதுடன் குடிநீர்களையும் எடுத்து அருந்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக மாணவர்களுக்கு, நோய்த்தொற்று ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாகவும் பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலைக்கு அருகிலுள்ள கிளிநொச்சி குளப் பக்கம் இருந்து, நாள்தோறும் வருகை தரும் குரங்குகளே, பாடசாலையில் அட்டகாசத்தில் ஈடுபடுவதுடன் மாணவர்களின் புத்தகப் பைகளையும் கற்றல் உபகரணங்களையும் குரங்குகள், மரங்களுக்கு எடுத்துச் செல்வதாகவும், இவற்றை குரங்குகளிடம் இருந்து மீட்பதற்கு பாடசாலை நிர்வாகம், நாள்தோறும் வெடி கொளுத்த வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி நகரத்திலுள்ள குரங்குகளை, நீண்ட தூரத்துக்குக் காடுகளில் கலைத்து விடுவதற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகம், வனஜீவராசிகள் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கிளிநொச்சி மகா வித்தியாலய பெற்றோர்களின் தொடர்ச்சியான வேண்டுகையாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .