2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் இன்புளுவெனசா (Influenza) H1N1

Gavitha   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்தில், இரண்டு கர்ப்பவதிகள் இன்புளுவெனசா (Influenza) H1N1 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை, சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால்  இன்று (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து, மூன்று குழந்தைகள் உட்பட மொத்தமாக அறுவர், பன்றிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, கிளிநொச்சி பிரதேசத்தில் இந்நோய் பரவி வருவதை உணர்ந்து, அதிக சனத்தொகை இருக்கும் இடம், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பஸ் பயணங்கள், புகையிரத பயணங்கள், இந்நோயில் பாதிக்கப்பற்றோரை பராமரித்தல் போன்ற செயற்பாடுகளை, கர்ப்பிணிகள் தவிர்த்துக்கொள்ளுதல் வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சாதாரண வைரஸ் காய்ச்சலிலிருந்து, இன்புளுவெனசா (Influenza) H1N1 காய்ச்சலை பிரித்து அறிவது கடினமாகும். தகுந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவையும் விசேட வைத்திய நிபுணர்களது நேரடிக்கண்காணிப்புமே இன்புளுவெனசா (Influenza) H1N1 காய்ச்சலினை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு அவசியமாகும்.

எனவே எந்தவொரு கர்ப்பிணிக்கோ, சிசுவொன்றை பிரசவித்த தாயாருக்கோ, காய்ச்சல் ஏற்படின், காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே வைத்திய உதவியை நாடுவது அவசியமாகும்.

நோயின்அறிகுறிகள்

சளிக்காய்ச்சல், தடிமன்,  தொண்டைப்புண், மூக்குச்சளி, தலையிடி, உடல் வலி.

அபாயஅறிகுறிகள்

அதிகூடிய காய்ச்சல், மூச்சுவிடமுடியாமை, நெஞ்சு வலித்தல், மறதிக்குணம், நெஞ்சு படபடப்பு, வலிப்பு, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் காணப்படும். எனவே தற்போதைய சூழலில் அலட்சியமாக இருந்து விடாது, உடனடியாக உரிய சிகிச்சையை பெற்று, உயிராபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு, கிளிநொச்சி மாவட்ட சுகாதாரத் துறையினர் அவசர அறிவித்தலை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .