Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 14 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 15,439 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளதாக மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், இன்று செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார்.
யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தற்போது அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறியதைத் தொடர்ந்து அவர்களுக்கான வீட்டுத்திட்ட வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர்,
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மீள்குடியேறிய மக்களுக்குப் பல்வேறு வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டவுடன் 41 ஆயிரத்து 631 வீடுகள் தேவையாகக் காணப்பட்டன. இதில் பல்வேறு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலம் 26 ஆயிரத்து 192 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. எஞ்சிய 15 ஆயிரத்து 439 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது.
2016ஆம் ஆண்டில் மீள்குடியேற்ற அமைச்சினூடாக 1035 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றுக்கான நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் 750 வீடுகள் கட்டித் தருவதற்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இன்னும் சில வெளிநாட்டு உதவிகளின் மூலம் மேலும் சில வீடுகள் கிடைப்பதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago