2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 164 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 397 சிறிய குளங்களில் 164 வரையான குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஈ. தயாரூபன் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநலசேவை நிலையங்களின் கீழ் உள்ள குளங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவை புனரமைக்கப்பட்டு வருகின்றன.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய குளங்கள் பற்றி விவரங்கள் சேகரிக்கும் போது 554 குளங்கள் பற்றிய விவரங்கள் கிடைத்திருந்தன.
 
இதில் குளங்கள் தவிர்ந்த சிறிய நீர் தேங்கும் இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.
 
இவற்றில் 397 குளங்கள் மாவட்டத்தின் முக்கிய தேவை கருதியும் மக்களுக்கு நன்மையடையக் கூடிய வகையிலும் காணப்படுகின்றமையால் அவை குளங்கள் என்ற வகையில் தெரிவு செய்யப்பட்டு இவற்றில் 164 குளங்கள் இதுவரை கமநல சேவை நிலையங்களினூடாக புனரமைக்கப்பட்டுள்ளன.
 
ஏனையவற்றை புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X