2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் நெற் களஞ்சியசாலை வேண்டும்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் நெற் களஞ்சியசாலையொன்றை அமைத்துத் தருமாறு அப்பகுதி விவசாயிகள் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் 2ஆவது பெரிய குளமான அக்கராயன் குளத்தின் கீழ் காலபோக செய்கையில் 4,000 ஏக்கரிலும் சிறுபோகத்தில் 2,000 ஏக்கரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு செய்கை பண்ணப்படும் நெல்லை களஞ்சியப்படுத்த முடியாத நிலையில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் நெற் களஞ்சியசாலையை அமைத்துத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .