Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூன் 17 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதி மூலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 97 பேருக்கான மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாக சமூக சேவைகள் அமைச்சின் கிளிநொச்சி மாவட்ட அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 4 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்தவர்களில், இடுப்புக்கு கீழ் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 65 பேருக்கு மாதாந்தம் 1500 ரூபாயும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு மாதாந்தம் 3000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்களுக்குரிய மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள், அவர்களின் வீடுகளுக்கு கிட்டிய தூரத்திலுள்ள தபாலகம் அல்லது உபதபாலகம் ஊடாக பெற்றுக்கொள்கின்றனர்.
பிரதேச செயலக, சமூக சேவைகள் பிரிவு ஊடாக இதற்கான பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு முச்சக்கரவண்டி, சக்கரநாற்காலிகளின் உதவியுடன் இருப்பவர்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். ஏனையவர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago