2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி விளையாட்டரங்குக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் விஜயம்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சர்வதேச தரத்துக்கு அமைய 800 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் கட்டுமானப் பணிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர செவ்வாய்க்கிழமை (27) நேரில் சென்று பார்வையிட்டார்.

மைதானப் பணிகள் தொடர்பில் புனரமைப்பை மேற்கொள்ளும் நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்,

புனரமைப்பணிகள் எவ்வளவு காலத்துக்குள் நிறைவடையும் என்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

2016 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விழா கிளிநொச்சியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு ஏற்ற விதத்தில் மைதானத்தின் பணிகள் நடைபெறுகின்றனவா என்பது தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்தார். பெப்ரவரி மாதத்துக்குள் பணிகள் முடிவடையும் என அமைச்சர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .