2025 ஜூலை 12, சனிக்கிழமை

கிளி. புதிய பஸ் நிலையம் குறித்து ஆராய்வு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்துக்கான பஸ் நிலையம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, இன்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, பஸ் நிலையம் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் மற்றும் அமைவிடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில், பஸ் நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர்.

இந்தக் கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண நகர அபிவிருத்திப் பணிப்பாளர், வடமாகாண தனியார் போக்குவரத்துச் சபைத் தலைவர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகஸ்தர்கள், மாவட்ட வீதி அதிகாரசபை உத்தியோகஸ்தர்கள், கரச்சி பிரதேச செயலாளர், ​கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .