2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கிளி,முல்லைத்தீவு மாவட்டங்களில் 10,204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்

Kogilavani   / 2016 ஜூலை 04 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டத்தில் 10,204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாக மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் குறிப்படுகின்றன.

41,465 குடும்பங்களை கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆறு பிரதேச செயலக பிரிவுகளில் 4,396 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாக மாவட்ட புள்ளிவிபரத்  தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதில் முப்பது வயதுக்கு  உட்பட்ட இளம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் 193 காணப்படுகின்றன.  

நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளால் 1,617 பேரும் விபத்துக்களால் 93 பேரும், நோய் மற்றும் இயற்கை காரணங்களால் 2,301 பேரும், தற்கொலை காரணமாக 54 பேரும் ஏனைய காரணங்களால் 331 பேரும் கணவனை இழந்துள்ளனர்.

இதில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1,327 குடும்பங்களும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1,244 குடும்பங்களும், ஒட்டுசுட்டான் பிரதே செயலாளர் பிரிவில் 920 குடும்ங்களும், துனுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 545 குடும்பங்களும்;, மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 360 குடும்பங்களும்; வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 334 குடும்பங்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, 41,327 குடும்பங்களை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 5808 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன.  இதில் 302 குடும்பங்கள் முப்பது வயதிற்குட்டப்பட்ட இளம்பெண் தலைமைததுவக் குடும்பங்களாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .