2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கசிப்பு காய்ச்சல் அதிகரிப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 20 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, உமையாள்புரம் கால் ஏக்கர் பகுதியில் கசிப்புக் காய்ச்சல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் சிறுவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் அபிவிருத்திச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல இடங்களில் இருந்து வருபவர்கள், இந்தப் பகுதிக்கு வந்து கசிப்பை நுகர்வதால் பல்வேறு குற்றச் செயல்களும் இடம்பெற்று வருகின்றன. 18 வயதுக்கு குறைந்தவர்களும் இதற்கு அடிமையாகி வருகின்றனர்.

மேலும், தர்மபுரம் பகுதியிலிருந்து கசிப்பு எடுத்துவரப்பட்டு இப்பகுதியிலே காணப்படுகின்ற ஆட்கள் குடியிருக்காத 19 வரையான காணித்துண்டுகளில் கசிப்பு விற்பனைகள் இடம்பெற்று வருகின்றன.

கிராம அலுவலர், மாதர் அபிவிருத்திச் சங்கம், பொலிஸார் இணைந்து நேற்று வியாழக்கிழமை (19) மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 4 ½ போத்தல் கசிப்பு மீட்கப்பட்டிருந்ததாக அச்சங்கம் மேலும் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .