2025 ஜூலை 12, சனிக்கிழமை

கஞ்சா விற்றப் பெண் கைது

Kogilavani   / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை, ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம். ஹகந்தவெல தெரிவித்தார்.

இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தப் பெண்ணின் வீட்டை  சோதனை செய்தபோது,  மறைத்து வைக்கப்பட்டிருந்த 25கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.

சந்தேகநபரான பெண், நீண்டகாலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், 26வயதுடைய அவர், ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .