2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கட்டுத் துப்பாக்கியில் சிக்கி இளைஞர் படுகாயம்

George   / 2017 மார்ச் 26 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மதவாச்சி பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள பூனாவை கோம்ப கஸ்கடுவ என்ற இடத்தில், வயல் வேலைக்குச் சென்ற இளைஞன், கட்டுத் துப்பாக்கி  வெடித்து காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த  கட்டுத் துப்பாக்கியில் சிக்கியே இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (25) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மதவாச்சி, பூனாவையைச் சேர்ந்த மஞ்சுல பிரசன்னா குமார  (வயது 29) என்ற இளைஞரே பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற மதவாச்சி பொலிஸார், கட்டுத் துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .