2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

கடையடைப்புக்கு பதிலாக கறுப்புக்கொடி

George   / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

“எதிர்வரும் 27 ஆம் திகதி கடையடைப்பு செய்யப்பட மாட்டாது. ஆனால், அன்றைய தினம் கடைகளில் கறுப்பு கொடியை பறக்க விட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்க முடிவு எடுத்துள்ளோம்” என, வவுனியா வர்த்தக சங்க தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தொவித்துள்ளார்.

“நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு, வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை பிற்பகல் கடிதம் வழங்கப்பட்டது.

இது தொடர்பில் வவுனிய வர்த்தக சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாலை 5 மணியளவில் கலந்துரையாடியிருந்தனர். பூரண கடையடைப்பு மேற்கொள்ள போதிய காலஅவகாசம் இல்லை. எனவே, கடைகளில் கறுப்பு கொடியை பறக்க விட்டு வழமை போல் வர்த்தக நிலையங்களை திறந்து ஆதரவு வழங்கப்படும்.

அத்துடன், முதலாம் திகதி தொழிலாளர்கள் உரிமைக்காக கடைகள் பூட்டப்பட்டு விடுமுறை வழங்கப்படும்” எனவும் முடிவெடுக்கப்பட்டது” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .