Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2017 ஜனவரி 12 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
டெங்கு நுளம்பு சோதனையில் ஈடுபட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி, அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வீட்டு உரிமையாளரான பெண்ணை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையிலான பொது சுகாதார பரிசோதர்கள் ,மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் டெங்கு நுளம்பு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன்போது, டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது வீடு, காணி போன்றவற்றை வைத்திருந்ததாக, தாழ்வுபாட்டு கிராமத்திலுள்ள 3 வீட்டு உரிமையாளர்கள், ஆலய பங்குச்ச சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியோருக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.
அதனையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டர்களுக்காக நீதிமன்ற அழைப்பாணையை சம்பந்தப்பட்ட நபர்களிடம், மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் கையளித்துள்ளனர்.
அதன்போது, வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான பெண், நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்துள்ளதோடு, பொது சுகாதார பரிசோதகர்களினட கடமைக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றன.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், ஏனைய இரண்டு வீடுகளின் உரிமையாளர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையினை செலுத்துமாறு கட்டளையிட்டார்.
இதேவேளை, ஆலய பங்குச் சபை மற்றும் மன்னார் பிரதேச சபை என்பன தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளாததால், வழக்கு விசாரணை ஜுன் மாதம் 16 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago