2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கடற்தொழிலாளர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவும்

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

அண்மையில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தின் காரணமாக மன்னார் பேசாலை கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான டோலர் படகுகள் நீரில் மூழ்கி சேதமாகியுள்ள நிலையில், குறித்த மீனவ குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பேசாலை  கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகுகள் கடந்த மாதம் 16ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட திடீர் சுழற்காற்றின் காரணமாக கடலில் மூழ்கின.

இதன்போது சுமார் 47 டோலர் படகுகள் கடலில் மூழ்கின. இந்த நிலையில் சக மீனவர்களின் உதவியுடன் கடலில் மூழ்கிய டோலர் படகுகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தேடுதலின் போது சேதங்களுடன் 37 டோலர் படகுகள் மீட்கப்பட்ட போதும் மேலும் 10 படகுகள் முழுமையான சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

இதனால், டோலர் படகுகள் சேதங்களுக்குள்ளான கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட பேசாலை கிராம மீனவர்களுக்கு அரசாங்கம் உரிய நஷ்டஈட்டை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .