Freelancer / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டை பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஓலைத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற் படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
நக்டா நிறுவனத்தின் முகாமைத்துவத்தில் செயற்படுத்தப்படுகின்ற, ஓலைத்தொடுவாய் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்திற்கும் இந்திய முதலீட்டாளர்களின் தொழில்நுட்பங்களை உள்வாங்கி,அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க விரும்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த முதலீட்டாளர்களை ஓலைத்தொடுவாய் குஞ்சு கருத்தரிப்பு நிலையத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில், பிரதேச மக்களால் உருவாக்கப்பட்டு வருகின்ற கடலட்டை பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. (R)
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago