Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பரமணியம் பாஸ்கரன், க. அகரன்
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில், பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி, செயற்பட்ட குற்றச்சாட்டில், வர்த்தக நிலையமொன்று, நேற்று (24) பிற்பகல், பிராந்திய சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக வாணிக கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி திறந்து, பொருள்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில், குறித்த வர்த்தக நிலையம் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி (சுப்பர் மார்க்கட்), சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது.
குறித்த அங்காடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு பணிபுரியும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
36 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
36 minute ago
45 minute ago