2025 ஜூலை 12, சனிக்கிழமை

கண்டாவளை உப அலுவலகத்தை பிரதேச சபையாக்குமாறு கோரிக்கை

George   / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச சபையின் கண்டாவளை உப அலுவலகத்தை  பிரதேச சபையாக மாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முரசுமோட்டையில் அமைந்துள்ள கரைச்சிப்பிரதேச சபையின் கண்டாவளை உப அலுவலகமானது,  ஆயுர்வேத வைத்தியசாலை, பொதுநூலகம் என்பவற்றைக் கொண்டு காணப்படுகின்ற போதும், அலுவலகம் இயங்கி வரும் கட்டடம், மிக மோசமாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

எனவே, கண்டாவளை உபஅலுவலகத்தின் தேவைகளை நிறைவு செய்து தருமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இதேவேளை, பரந்தன் பொதுச்சந்தை, தருமபுரம் பொதுச்சந்தை உள்ளிட்ட சந்தைகளின் வருமானமும், கண்டாவளைப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வு மற்றும் குற்றச்செயல்களுக்கு நீதிமன்றினூடாக அறவிடப்படும் நிதி என்பன, பிரதேச சபைக்கு கிடைக்கின்ற போதும், கண்டாவளைப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை” எனவும் மக்கள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.

 அத்துடன், உப அலுவலகத்தின் தேவைகளை நிறைவு செய்து தருவதுடன், தனியான ஒரு பிரதேச சபையாக பிரிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .