2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கண்டி யாசகர் தண்ணீரூற்று விபத்தில் மரணம்

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில்  இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றின்போது  வீதியில் சென்றுகொண்டிருந்த  யாசகருவர் படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் கண்டி மாவட்டத்தினைச் சேர்ந்த 38 அகவையுடைய சிவராசா, முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்ற வந்துள்ளார்.

இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில் வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில்   தண்ணீரூற்று பகுதியில் விபத்து ஒன்றின் போது காயமடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்துள்ளார். இவரை அவசர நோயாளர் அம்பியூலன்ஸ் மூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .