2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கரைச்சி பிரதேச சபையில் ஆளணிப் பற்றாக்குறை

Sudharshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபைக்கு சுகாதார தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை உள்ளதோடு, வாகனங்களுக்கும் தட்டுபாடு உள்ளதால் கழிவகற்றல் நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுவதாக பிரதேச சபை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.

கரைச்சி பிரதேச சபை 620 சதுரமைல் பரப்பளவை கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் ஒரு நகரசபையும் இரு பிரதேச சபைகளும் இருக்கவேண்டும். ஆனால், ஒரு பிரதேச சபையே இப்பகுதியில் இயங்கி வருகின்றது. பிரதேச சபையில் பல்வேறு வேலையாட்களுக்கான வெற்றிடம்; காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .