Freelancer / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய இரண்டு கற்களை அனுமதியற்ற முறையில் வவுனியாவுக்கு கொண்டு சென்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து ஒரு கைபிடி மண்ணும் மீட்கப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டும் நடவடிக்கையாக இருக்கலாம் எனவும் பொலிஸாரால் சந்தேகிக்கப்பட்டுள்ளது.
தண்ணிமுறிப்பு பகுதியில் எதுவித அனுமதியும் இன்றி பாரிய இரண்டு கற்களை அகன்று கனரக வாகனங்களில் நேற்று முன்தினம் (21) கொண்டு சென்றபோது இராணுவத்தினரின் வீதிச் சோதனையில் மறிக்கப்பட்டு சோதனை செய்த பின்னரே பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாரிய கல்லினை ஏற்றிசென்ற வாகனம் மற்றும் பட்டாவாகனம் மற்றும் சொகுசு வாகனம் என்பன ஒட்டுசுட்டான் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் கைதானவர்களையும் சான்றுபொருட்களையம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026