2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கலந்துரையாடல்

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கரைச்சி பிரதேச சபையின்  ஆளுகைக்குட்படட அனைத்து உணவகக் கடைக்காரர்களுக்கான கலந்துரையாடல், நேற்றுக் காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், பிரதேச சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், உணவு சுகாதார தன்மை, சமையலாளர்களின் சுகாதார முறைமைகள், கழிவகற்றும் முறைமைகள், 2019ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிற தமிழ் மொழியிலான பெயர் அமுலாக்கல், உணவகங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குகிற விடையங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதில், தவிசாளர் வேழமாலிகிதன், உப  தவிசாளர் தவபாலன், உறுப்பினர் ஜெகதீஸ்வரன், சுகாதார வைத்திய அதிகாரி சுவேந்திரன், பொது சுகாதார பரிசோதகர்கள், உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி  ஆகியோர் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .