Freelancer / 2022 டிசெம்பர் 02 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாஸ்கரன்
மாங்குளம் பகுதியில் உள்ள கல்குவாறிப் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் உள்ளூர் துப்பாக்கியும், 100 கிராம் ஈயம், தீக்குச்சிமருந்து, துப்பாக்கி ரவைகள், வாள் ஒன்று மற்றும் மான் கொம்புகள் இரண்டை கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகன் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
வனஜீவராசிகன் திணைக்கள அதிகாரிகள் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். R
19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
42 minute ago
1 hours ago