2025 ஜூலை 10, வியாழக்கிழமை

கள் விற்பனை நிலையத்தை மாற்றுக

Menaka Mookandi   / 2017 ஜனவரி 16 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி பாரதிபுரம் செபஸ்தியார் வீதியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தை, வேறொரு இடத்துக்கு மாற்றுமாறு கோரி, பாரதிபுரம் மக்களின் கையொப்பங்கள் இடப்பட்ட கோரிக்கை கடிதமொன்று, கிராம சேவையாளர் ஊடாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இரணைமடு சந்திக்கு அண்மையிலும் இரணைமடு பொதுச்சந்தைக்கு நேரெதிரிலும் அமைந்துள்ள இந்தக் கள் விற்பனை ​நிலையம், ஆலயங்கள் மற்றும் முன்பள்ளி சிறுவர் பாடசாலை போன்ற முக்கிய பகுதிகளுக்கு சற்று அருகிலும் அமைந்துள்ளது. இதனால், பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 12 பொது அமைப்புக்கள் இணைந்து, கள்விற்பனை நிலையத்தை வேறொரு இடத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .