2025 ஜூலை 05, சனிக்கிழமை

கள் விற்பனை நிலையத்தால் சிக்கல்

Menaka Mookandi   / 2016 ஜூலை 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இரணைமடு சந்தியில் அமைந்துள்ள கள் விற்பனை நிலையத்தினால், அப்பகுதியில் குழப்பங்கள் ஏற்படுவதுடன், அப்பகுதியூடாக போக்குவரத்து செய்வதில் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளதென செய்ய அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பாரதிபுரம், இரணைமடு சந்தியில் அமைந்துள்ள குறித்த கள்ளுத் தவறணைக்கு வரும் மதுப் பிரியர்கள், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக போதையான நிலையில் அடிக்கடி குறித்த பகுதியில் சண்டைகள் இடம்பெற்றும் வருகின்றன. கடந்த 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு அப்பகுதியில் கத்திகுத்து இடம்பெற்று, இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பாரதிபுரம் மக்களின் பிரதான வீதியாக அவ்வீதி காணப்படுவதாகவும், இரணைமடு பொதுசந்தைக்கு முன்பாக குறித்த தவறணை காணப்படுவதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், குறித்த வீதியை பயன்படுத்தி பெண்கள், குறிப்பாக சிறுவர்கள் சென்றுவர முடியாதுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .