Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
க. அகரன் / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில், கடந்த 215 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது கோரிக்கைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதிலேதும் அரசாங்கத்தாலும் தமிழ்த் தலைமைகளாலும் வழங்கப்படாத நிலையில், சர்வதேசம் தமக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் எனக் கோரி இரண்டு நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை, கடந்த திங்கட்கிழமை (25) முதல் முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அங்கிருந்து தாம் போராட்டத்தை முன்னெடுத்துவரும் ஏ9 வீதியின் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் உடல்நிலை சோர்வடைந்திருந்த நிலையில், இன்று மாலை 3.30 மணியளவில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்சகோதரி நிக்கோலாவால் நீராகாரம் வழங்கி, உணவு தவிர்ப்புப் போராட்டம் முடித்து வைக்கப்பட்டது.
எனினும், தமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால், விரைவில் தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
8 minute ago
43 minute ago
46 minute ago