Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 06, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொக்குளாய் - கொக்குத்தொடுவாய் மக்களுக்குச் சொந்தமான அக்கரைவெளி பூர்வீகக் காணிகளைத் துப்புரவு செய்துகொண்டிருந்த மக்களை, மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று தொடர்பில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம், பாதிக்கப்பட்ட மக்களால், இன்று (17), முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, குறித்த காணிகளைத் துப்புரவு செய்துகொண்டிருந்த போது, அவ்விடத்துக்குச் சென்றுள்ள மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் நால்வர், குறித்த பகுதி, மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என்றும் இதனைத் துப்புரவு செய்யவேண்டாம் என்றும் தடுத்துள்ளதாக, அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
பல நூற்றுக்கணக்கான குடும்பங்களில் வயல் நிலைங்களைக் கொண்ட அக்கரைவெளிப் பகுதி மக்கள், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர், குறித்த பகுதியிலிருந்து வெளியேறிய நிலையில், தங்கள் வயல் நிலங்களுக்காக, 1925ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அறுதி உறுதிகளை சிலர் வைத்துிருப்பதாகவும் மேலும் சிலர், அவ்வாறான உறுதிகளைத் தொலைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
1957ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பேர்மிட்களையும், தாங்கள் வைத்திருப்பதாக, அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு இந்த மக்களுக்குச் சொந்தமான வயல் காணிகள், தற்போது காடாகக் காணப்படுவதால், அவற்றைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில், கடந்த வாரம் ஈடுபட்டதாகவும் இதன்போது, அங்கு வந்த அதிகாரசபை அதிகாரிகள், இந்தக் காணிகள், அதிகார சபைக்குச் சொந்தமானதெனக் கூறி, துப்பரவுப் பணிகளைத் தடுத்து நிறுத்தியதாகவும், இது தொடர்பில், பிரதேச செயலாளரிடம் முறையிட்டதாகவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (18), குறித்த அக்கரைவெளிப் பகுதிக்குச் செல்லவுள்ள கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர் ஆகியோர், நிலைமையை நேரில் ஆராயவுள்ளதாக, பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
06 Jun 2025
06 Jun 2025