Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பற்றைக் காடுகளாக உள்ள தனியார் மற்றும் பொதுக் காணிகளை, உடனடியாக துப்புரவு செய்யப்பட வேண்டுமென்று, கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மக்கள் நடமாடுகின்ற அல்லது மக்கள் குடியிருப்பு பகுதிகளில், பற்றைக் காடுகளாகவுள்ள தனியார் மற்றும் பொது காணிகளை உடனடியாக துப்புரவு செய்யுமாறும் அக்காணிகள் தொடர்ந்தும் பராமரிக்கப்படல் வேண்டுமென்றும் கூறினார்.
தம்மால் வழங்கப்படுகின்ற கால எல்லையினுள், துப்புரவு செய்யாவிடின், அக்காணிகள் பிரதேச சபையின் ஏற்பாட்டில் துப்பரவு செய்யப்பட்டு, காணி உரிமையாளர்களிடம் இருந்து கூலியுடன் அபராதமும் அறவிடப்படுமெனத் தெரிசித்த அவர், இவ்வாறான பற்றைக்காடுகளைத் துப்புரவு செய்வதால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தவிர்ப்பதுடன், சூழலையும் அழகாக வைத்திருக்க முடியுமெனவும் கூறினார்.
மேலும், அது மட்டுமல்லாது வீதிகளில் உள்ள வடிகால்களில், கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு, அபராதம் விதிக்கப்படுமெனவும், தவிசாளர் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago