2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

காணிகளை விடுவிக்காது அரசாங்கம் பின்னடிப்பதாக தெரிவிப்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 நவம்பர் 23 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றாண்டு காலமாக, தங்களது சந்ததியினர் வாழ்ந்து வந்த இரணைத்தீவை விடுவிப்பதற்கு, பல காரணங்களைக் கூறி, அரசாங்கம் பின்னடித்து வருவது ஏன் என்று, இரணைதீவு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கிளிநொச்சி, பூநகரிப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைதீவு, இதுவரை விடுவிக்கப்படாது, கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கீழ் உள்ளது. இந்நிலத்தை விடுவிக்கக்கோரி, கடந்த மே மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஏழு மாதங்களுக்கு மேலாக, இன்றும் (207ஆவது நாள்) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, தங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு, அரசாங்கமும் அத்தோடு இணைந்து, அரசியல்வாதிகளும் வழிசெய்து தரவேண்டும் என்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .